அரசாங்கங்களின் கடமை

பர்வதங்கள் என்பது வேதாகமத்தில் மனித அரசைக் குறிக்கின்றன.  பெரிய பர்வதங்கள் ஒரு நாட்டின் மத்திய அரசையும், சிறிய மலைகள் உள்ளூர் அரசையும் குறிக்கும்; இவை அனைத்தும் நீதியுடன் செயல்பட வேண்டும்.  தேவபக்தியுள்ள அரசு மூன்று காரியங்களை நிறைவேற்றும் (சங்கீதம் 72:1-4.) ஆட்சியின் மேலாண்மை பொறுப்பு கொடுக்கப்பட்டவர்கள் “தேவனுடைய ஊழியக்காரர்கள்” என்று அழைக்கப்படுகிறார்கள் (ரோமர் 13:3).

நீதி:
தேவபக்தியுள்ள அரசுகள் நீதியின் முன்மாதிரி செயல்களில் சிறந்து விளங்கும்.  தேவனுடைய பரிசுத்தம், அவருடைய நீதியாக வெளிப்படும்.  ஏழைகள், புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோர் நீதி இழக்கப்படுகிறார்கள்.  செல்வந்தரும், செல்வாக்கு உடையவர்களும், ஏழைகள் அவர்களுக்கு நீதி அளிக்கக் கூடிய நீதிமுறை செயல்முறையிலிருந்து விலக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்துகின்றனர்.  தேவபக்தியுள்ள அரசு, முக்கியமான குடிமக்களால் புறக்கணிக்கப்படுகிற அல்லது மௌனமாக்கப்படுகிற முணங்கல், நெகிழ்ச்சியான உளறல்கள், கூக்குரல்கள் ஆகியவற்றுக்கு உணர்வுடனும் கரிசனையுடனும் பதிலளிக்கும்.

இரட்சித்து விடுவித்தல்:
மனிதர்கள், பிறரை அடிமைப்படுத்தி, ஒடுக்கிகளாகவும் சுரண்டுபவர்களாகவும் மாறும் தீய இயல்பை உடையவர்கள்.  மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு, ஒடுக்குபவர்களிடமிருந்து விடுவிப்பதற்குப் பதிலாக, சிலர் தாமே சுரண்டுபவர்களாக மாறுகிறார்கள்.  ஒரு நீதிபதியே கூட, பிறரைத் துன்புறுத்தி, அடிமைகளாக வைத்திருக்கலாம்.  ஐ.நா. நீதிபதி ஒருவர், இங்கிலாந்தில் ஒரு இளம் பெண்ணை அடிமையாக வேலை செய்யக் கட்டாயப்படுத்தியதால், ஆறு வருடம் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார் (தி கார்டியன், மே 2, 2025) நீதியுள்ள அரசுகள், ஆட்சியாளர்களிடமிருந்தும் சாதாரண குடிமக்களிடமிருந்தும் எதிர்பார்க்கப்படும் தரங்களைப் பற்றிய விழிப்புணர்வையும் உணர்வையும் உருவாக்கும்.

தண்டித்தல்:
அரசாங்கம் மக்களை விடுவிப்பதோ, நீதியை வழங்குவதோ மட்டுமல்ல, சட்டத்தை மீறுவோரையும் தண்டிக்க வேண்டும்.  அத்தகைய சட்ட மீறுபவர்கள் மீண்டும் தீமை செய்யக் கூடிய வலிமையோ, செல்வமோ, செல்வாக்கோ, தொடர்புகளோ பெறாதவாறு தண்டிக்கப்பட வேண்டும்.  வருத்தமளிப்பதாவது, மக்கள் அறிவில்லாமல் சட்ட மீறுபவர்களையே அரசில் சட்டம் இயற்றுபவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  சட்டத்தை மீறுபவர்களும், ஒடுக்குபவர்களும், அவதூறு செய்பவர்களும், முகஸ்துதிக்காக செய்பவர்களும், துன்மார்க்கர்கள் போன்றவர்களாக இருக்கலாம். அரசு பொறுப்பில் இருப்பவர்கள் தீமை செய்பவர்களுக்கு அச்சமாக இருந்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும் (ரோமர் 13:3). துன்மார்க்கர்களைத் தண்டிப்பதன் மூலம், அத்தகைய அரசுகள் எதிர்காலத்தில் பிரச்சனை உருவாக்கக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றன.  மேலும், சமாதானத்திற்கும் நீதிக்கும் ஏற்ற சூழ்நிலையை உருவாக்குகின்றன.

தேவனுடைய ராஜ்யம்:
மேசியா அரசாங்கத்தை தனது தோள்களில் வைத்திருக்கிறார்,  அவருடைய சீஷர்கள், அவரது ராஜியத்தை இந்த பூமியின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விரிவுபடுத்த அழைக்கப்பட்டுள்ளனர் (ஏசாயா 9:6). 
நீதியுள்ள தேவ ராஜ்யத்திற்கான ஒரு வழிநடத்துபவராக நான் இருக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran