‘கடன் ரத்து பிரார்த்தனை’ என்ற கருப்பொருளைக் கொண்டு ஜெபக் கூட்டத்திற்கான விளம்பரம் இருந்தது! வெகுஜன ஜெபக் கூட்டத்தை நடத்துவதன் மூலம் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய தேவ குமாரனுக்கு அதிகாரம் உள்ளதா? யாராவது கடன் வாங்கியிருந்தால், அவர்கள் அதை திருப்பிச் செலுத்த வேண்டும். “தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை. ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்” (சங்கீதம் 37:21) என்று வேதாகமம் போதிக்கிறது. உண்மையில், துன்மார்க்கர்கள் திரும்பக் கொடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கடன் வாங்குகிறார்கள். ஒரு நபர் வங்கியில் இருந்து ஒரு பெரிய கடனைப் பெற்று, தனது கடனை அற்புதமாக தேவன் ரத்து செய்ய வேண்டும் என்று ஜெபக் கூட்டத்திற்கு வர முடியுமா?
தேசிய வாக்குறுதி:
கீழ்ப்படிதலுள்ள இஸ்ரவேலர் பொருளாதார ரீதியாக வளமாக இருப்பார்கள் என்றும், இஸ்ரவேலர் பல ஜாதிகளுக்கு கடன் கொடுப்பார்கள். ஆனால், அவர்கள் யாரிடமிருந்தும் கடன் வாங்கும் அவசியம் இருக்காது. இஸ்ரவேலர் மற்றவர்களை ஆளலாம். மற்றவர்கள் யாரும் இஸ்ரவேலரை ஆள இயலாது (உபாகமம் 15:5-6) என தேவன் வாக்களித்தார். ஆனால் தேவனுக்கு கீழ்ப்படியாத தேசம் தண்டிக்கப்பட்டது; கிமு 721 இல் வடக்கு இஸ்ரவேல் சிதறடிக்கப்பட்டது, தெற்கில் இருந்த யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். சிலர் இந்த வாக்குறுதியை தங்களுக்கும், குடும்பங்களுக்கும், வணிகங்களுக்கும் பயன்படுத்தி கடன்களை ரத்து செய்வதாகக் கோருகிறார்கள், இது சரியல்லவே.
கடன் வாங்குதல்:
கடன் வாங்குவது அல்லது கடன் பெறுவது பாவம் என்று வேதாகமம் குறிப்பாகச் சொல்லவில்லை. தேவ பிள்ளைகள் கடன்களைப் பெறுவதில் ஞானிகளாக இருக்க வேண்டும். விளம்பரங்களால் தூண்டப்பட்டு பலர் தனிப்பட்ட கடன்களுக்கு விண்ணப்பிக்கிறார்கள் மற்றும் கடனில் இருந்து வெளியே வர போராடுகிறார்கள்.
நடைமுறை படிகள்:
முதலில், கொள்முதல் அவசியமா என்பதை மதிப்பீடு செய்ய மற்றும் ஆராய்ந்துப் பார்க்க ஆரம்பியுங்கள். கடன் பெற்று வாங்கும் பொருள் இல்லாமல் வசதியாக வாழ முடியுமா? எதிர்காலத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமான முடிவா? அல்லது நான் பரலோகத்தில் முதலீடு செய்ய வேண்டுமா? இரண்டாவதாக, ஏதாவது வாங்க கடன்களைப் பெறுவது தேவனின் சித்தமா என்று ஜெபிக்கவும்.
மூன்றாவது, தனிப்பட்ட மற்றும் குடும்பத் தேவைகளைப் பாதிக்காமல், மாதாந்திர கொடுப்பனவுகளை எளிதாகச் செய்ய முடியுமா என்று ஆராயுங்கள். நான்காவதாக, வாங்கிய சொத்தை அவசரகாலத்தில் விரைவாக விற்க முடியாவிட்டால், அது ஒரு பொருளாதார சுமையாக அல்லது ஒரு பாரமாக மாறும். ஐந்து, சொத்து எதிர்காலத்தில் சில வருமானங்களைக் கொண்டுவர வேண்டும், இல்லையென்றால் அது ஒவ்வொரு மாதமும் கூடுதல் செலவுகளாக இருக்கலாம். ஆறாவது, கடன் செலுத்துதல் ஒரு நபரைத் திருடவோ அல்லது நேர்மையை இழக்கவோ செய்யக் கூடாது. ஏழாவது, பவுலின் அறிவுரையை நினைவில் கொள்ளுங்கள்; “எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான்” (ரோமர் 13:8).
கடன் வாங்கும் விஷயத்தில் நான் ஞானமாக நடந்துக் கொள்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran