டிஜிட்டல் ஆலோசனையால் ஏற்பட்ட மரணம்

16 வயதான ஆடம் ரெயின் தற்கொலை செய்து உயிரிழந்தபோது, அவரது பெற்றோர் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்தனர். ஆனால் சில வாரங்களுக்குள் அவர்கள் இன்னும் நடுங்கவைத்த உண்மையை கண்டறிந்தனர்: அவன் இறுதி வாரங்களில் நெருக்கமான நம்பிக்கைக்கு உரியதாக இருந்தது ஒரு நண்பன், ஒரு ஆசிரியர், அல்லது ஒரு ஆலோசகர் அல்ல அது தான் ChatGPT. சில  ஆயிரக்கணக்கான உரையாடல்களின் மூலம், ChatGPT தான் ஆடத்தின் மிக நெருங்கிய நம்பத்தகுந்தவனாக மாறியது; அதன் மூலம் தான் அவன் தனது பதட்டம் மற்றும் மன உளைச்சலை திறந்து சொல்லத் தொடங்கினான். அந்த செயலி, அவன் கொண்டிருந்த ‘மிகவும் தீங்கான மற்றும் தன்னை அழித்துக்கொள்ளும் எண்ணங்களை’ உறுதி செய்து, அவனை இன்னும் இருண்ட நம்பிக்கையற்ற இடத்திற்கும் இழுத்துச் சென்றது. தற்கொலை செய்யும் வழியையும் அது அறிவுறுத்தியதால், அதையே செய்ய அவன் சென்றான்
(இந்தியா டுடே, ஆகஸ்ட் 27, 2025).

வேதாகம எச்சரிக்கை:
ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் தீயோரின் ஆலோசனையில் நடக்கவும் கூடாது; பாவிகளின் பாதையில் நிற்கவும் கூடாது; இகழ்சியாளர்களும் பரிகாசக்காரர்களும் உட்காரும் இடத்தில் உட்காரவும் கூடாது. ஆனால் அவர் கர்த்தருடைய வார்த்தையை பகலும் இரவும் தியானிக்க வேண்டும் (சங்கீதம் 1:1–3).

ஆலோசகர்கள்:
இன்றைய இளைஞர்கள், தங்கள் ஸ்மார்ட்போன் திரைகளின் மூலம், யாருக்கும் தெரியாமல், தனிப்பட்ட தொடர்பில்லாத ஆலோசகர்களை நாடுவதில் விருப்பம் கொள்கின்றனர்.  ஸ்மார்ட்போன்கள், அவற்றைப் பயன்படுத்துவோரைக் கூட முட்டாள்களாக மாற்றும் திறன் கொண்டவை.  தினமும் வேத வசனத்தை தியானிக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதன் தேவனிடமிருந்தே தெய்வீக ஆலோசனையை பெறுவான்; ஏனெனில் தேவன் அற்புத ஆலோசகர் ஆவார் (எசாயா 9:6).
சில தெய்வீக ஆலோசகர்கள் சபையின் தலைவர்களாக உள்ளனர்.  அவர்களை அணுக வேண்டிய இடத்தில், ஆடம் போன்ற சிறுவர்கள் ஒரு ஆப் அல்லது செயற்கை நுண்ணறிவை அணுகும்போது, அவர்கள் தெய்வீக ஆலோசனையைப் பெறமாட்டார்கள்; தீய ஆலோசனையே கிடைக்கும்.

வழிகள்:
பொதுவாக, ஒரு தீய ஆலோசகர் மக்களை பாவத்தின் வழிகளில் நடத்திப்போகிறார்.  அவர்கள் பாவிகளுடன் நிற்கத் தொடங்குகிறார்கள் அல்லது பாவிகளின் நிலைப்பாட்டை ஏற்கிறார்கள்.  இவ்வாறு அவர்கள் நீதியின் தெய்வீக வழிகளில் இருந்து விலகி, இறுதியில் மரணத்திற்கே அழைத்துச் செல்லும் பாதைகளில் செல்கின்றனர்.
டிஜிட்டல் ஆலோசனையின் படி, அந்த வழிகள் வாழ்க்கை, நன்மை, நேர்மை, சந்தோஷம் ஆகியவற்றின் பாதைகள் போலத் தோன்றினாலும், உண்மையில் அவை முட்டுச்சந்துகளே
(நீதிமொழிகள் 14:12).

இகழ்ச்சியாளர்கள்:
துரதிர்ஷ்டவசமாக, பல டிஜிட்டல் மீடியா தளங்களிலுள்ள அரட்டை குழுக்கள் இகழ்ச்சியாளர்கள், சந்தேகிகள் மற்றும் பரிகாசக்காரர்களின் கூடங்களாக இருக்கின்றன.  அவர்கள் தேவனை, அவருடைய பரிசுத்த வார்த்தையை, சபையை, மேலும் தேவன் செய்யும் கிரியைகளையும் இகழ்ந்து பேசுகின்றனர்.

மரணம்:
தெய்வீகமற்ற டிஜிட்டல் ஆலோசனைகளை கேட்டு, அத்தகைய பாவமயமான கட்டளைகளை அடிப்படையாகக் கொண்டு கருத்துகளை உருவாக்குவது, இறுதியில் தேவனை அவமதிப்பவர்களின் சங்கத்தில் சேர்த்துவிடும்.  இது தேவனிடமிருந்து நித்தியப் பிரிவை, அதாவது இரண்டாம் மரணத்தை உண்டாக்கும்.

நான் ஞானத்தையும் ஆலோசனையையும் வேதத்திலிருந்து தேடுகிறேனா?
 

Rev. Dr. J.N. Manokaran