எரேமியா 33:3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். சங்கீதம் 145:18 உண்மையாய் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். ஏசாயா 55:6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். ஏசாயா 58:9; ஏசாயா 65:24
1. ஆபத்தில் கூப்பிடுங்கள் சங்கீதம் 50:15 ஆபத்துகாலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய் சங்கீதம் 72:12 கூப்பிடுகிற எளியவனையும் விடுவிப்பார் சங்கீதம் 91:15 கூப்பிடுவான் மறுஉத்தரவு அருளிச்செய்வேன் சங்கீதம் 107:19 ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள் 1இராஜாக்கள் 18:24-27 எலியா: அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.