தேவன் தனது பிள்ளைகள் முட்டாள்தனமான மற்றும் பொல்லாத செயல்களைச் செய்வதைத் தடுக்க கிருபையுள்ளவர். நம்மைத் தடுக்க அவர் பல்வேறு வழிகளைப் பயன்படுத்தலாம். இருப்பினும், அத்தகைய எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணித்து, சிலர் கடுமையான பாவத்தில் விழுகிறார்கள். பிலேயாம் தேவ தூதனால் தடுத்து நிறுத்தப்பட்டான், தூதரை அவனால் அடையாளம் காண இயலவில்லை, ஆனால் அவனது கழுதையால் அடையாளம் காண முடிந்தது. இருப்பினும் அவன் முன்னேறிச் சென்று தனது பாவங்களினாலே மரித்தான் (எண்ணாகமம் 22:21-39).
பாதுகாப்பு மற்றும் காவல்:
தாவீது இஸ்ரவேலின் வருங்கால ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டான். அந்தப் பதவியில் இருந்த போதிலும் சவுல் நிராகரிக்கப்பட்டதால், தாவீதைக் கொல்ல விரும்பினான். வீடில்லை, வருமானத்திற்கு வழியில்லை, சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்பவர்கள் மற்றும் பக்கத்து நாடுகளைச் சேர்ந்த கொள்ளையர்களின் தொல்லைகளிலிருந்து மேய்ப்பர்களுக்கு தேவன் பாதுகாப்பு அளித்தார். நாபால் தாவீதின் பயனாளிகளில் ஒருவனாக இருந்தான், அவன் ஒரு செல்வந்தன். தாவீது வனாந்தரத்தில் தனக்கும் தன்னுடன் இருந்த ஆட்களுக்கும் உணவு வழங்குமாறு அவனுக்கு ஒரு கோரிக்கையை அனுப்பினான். இருப்பினும், நாபால் தாவீதின் ஊழியர்களை கேலி கிண்டல் செய்து, அவர்களை வெறுங்கையுடன் அனுப்பினான். நாபாலின் குடும்பத்தை கொல்ல தாவீது விரும்பினான். நாபாலின் மனைவி அபிகாயில், தேவையான உணவுப் பொருட்களை நேரில் வழங்குவதன் மூலம் அதை ஞானமாகத் தடுத்தாள். அந்தத் தீய செயலைச் செய்வதிலிருந்து தேவன் தன்னைத் தடுத்ததாக தாவீது பின்னாட்களில் கூறினான் (1 சாமுவேல் 25:32).
கூலிப்படையா அல்லது அபிஷேகம் செய்யப்பட்டவனா?
தாவீது ஒரு நாள் சவுலின் கைகளால் இறந்துவிடுவேன் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் (1 சாமுவேல் 27:1). அவன் சோர்வை அனுபவித்து, இஸ்ரவேலின் எதிரி தேசமான பெலிஸ்தியரிடம் தஞ்சம் புகுந்தான். ஆகீஸ் ராஜா அவனுக்கு அடைக்கலம் கொடுத்தான், தாவீது அவனுடைய நம்பிக்கையைப் பெற்றான். பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலின் மீது படையெடுக்கத் திட்டமிட்டபோது, அவர்கள் ஆப்பெக்கில் படையைக் கூட்டினர் (1 சாமுவேல் 29:1). தாவீதும் அவனுடைய ஆட்களும் இஸ்ரவேலை ஆக்கிரமிக்க அங்கே ஒரே அணியாக நின்றனர். இருப்பினும், ஆகீஸ் ராஜாவின் தளபதிகள் தாவீது தங்களுடன் வருவதை ஏற்றுக்கொள்ளவில்லை. தாவீது இடம் மாறினால், தாங்கள் தோல்வியடைவோமே என்று பயந்தார்கள். தாவீதின் விசுவாசத்திற்காக ஆகீஸ் பாராட்டுகிறான், ஆனால் தன் தளபதிகள் காரணமாக தாவீதை வெளியேறும்படி கெஞ்சுகிறான். இவ்வாறு, தாவீது ஒரு கூலிப்படையாக மாறுவதிலிருந்தும், அவன் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட மக்களுக்கு எதிராகப் போரிடுவதிலிருந்தும் காப்பாற்றப்பட்டான். அந்தப் போரில், ராஜாவாகிய சவுல், யோனத்தான் மற்றும் சவுலின் இரண்டு மகன்கள் கில்போவா மலையில் இறந்தனர், தாவீது குற்றவாளியாக ஆவதில் இருந்து தப்பினான் (1 சாமுவேல் 31:6).
நான் தாவீது போல சொந்தமாக செய்ய முயற்சி இருக்கிறேனா?
Rev. Dr. J.N. Manokaran