வெறுங்கைகள்

நியாயதிபதிகளின் ஆட்சிக்காலத்தில், உண்ணக்கூட போதுமான உணவில்லாத மோசமான ஒரு பஞ்சம் யூதா நாட்டில் ஏற்பட்டது. அப்போது யூதாவிலுள்ள பெத்லெகேமை விட்டு, எலிமெலேக்கு என்பவன் தனது மனைவியுடனும், இரண்டு குமாரர்களுடனும் மலைநாடான மோவாபுக்குச் சென்றான்.  இரண்டு மகன்களும் மோவாபியர்களை மணந்தனர். துரதிர்ஷ்டவசமாக, மூன்று ஆண்களும் இறந்துவிட்டனர், மூன்று விதவைகள் மட்டுமே எஞ்சியுள்ளனர். ஒரு விதவை தனது மக்களிடம் திரும்பிச் செல்லத் தேர்ந்தெடுத்தார், ஆகையால் ரூத்தும் நகோமியும் இஸ்ரவேலுக்குத் திரும்பினர். “நான் இங்கிருந்து போகும்போது எனக்கு விருப்பமான அனைத்தையும் பெற்றிருந்தேன். ஆனால் இப்போது நான் வெறுமையானவளாகும்படி கர்த்தர் செய்துவிட்டார். என்னைத் துக்கமுள்ளவளாகும்படி கர்த்தர் செய்தபிறகு, ஏன் என்னை நகோமி (மகிழ்ச்சி) என்று அழைக்கிறீர்கள்? சர்வ வல்லமையுள்ள தேவன் எனக்கு மிகுந்த துன்பத்தைக் கொடுத்துவிட்டார்” என்றாள்”.(ரூத் 1:21). ஆனால் தேவன் மிகுந்த இரக்கத்துடன் அவளுடைய வாழ்க்கையையே மாற்றினார்.  

அமெரிக்காவில் புதிய ஆட்சி அனைத்து ஆவணமற்ற வந்தேறிகளையும் வெளியேற்ற முடிவு செய்ததால், ஆயிரக்கணக்கானோர் வெறுங்கையுடன் திரும்ப வேண்டியிருந்தது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் அங்கு செல்வதற்காக தனது அனைத்து பரம்பரை சொத்து மற்றும் சேமிப்பான 100 இலட்சம் (ஒரு கோடி) ரூபாய்களை செலவிட்டார்.  ஒரு டஜன் நாடுகளையும் அடர்ந்த காடுகளையும் கடந்து, பசியையும் ஆபத்தையும் எதிர்கொண்டு, இறுதியாக அங்கு சென்றாள், ஆனால் ஜனவரி 2025 இல் அதாவது சில நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டாள்.

நல்ல வாழ்க்கை என்னும் கனவு  
மக்கள் எப்போதும் ஒரு சிறந்த வாழ்க்கையை விரும்புகிறார்கள், கனவு காண்கிறார்கள், அதாவது இலகுவான, எளிமையான, பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகள் காணக்கூடிய, தொந்தரவு இல்லாத, வெளிப்படைத்தன்மையுள்ள மற்றும் கணிக்கக்கூடிய வாழ்க்கையை விரும்புகிறார்கள். சில வழிகளில், இவை அமெரிக்காவில் நிறைவேறுகின்றன. அக்கறையுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அதாவது சிறந்த கல்வி வாய்ப்புகள் மற்றும் நல்ல வேலைகள் என இடம்பெயர்கிறார்கள். மேலும், பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, ​​அமெரிக்கா சிறந்த சட்டம் மற்றும் ஒழுங்குடன் பாதுகாப்பு மற்றும் பத்திரமான சூழலையும் வழங்குகிறது. இருப்பினும், அத்தகைய கனவுகள் திடீரென்று, இரக்கமின்றி சிதைந்துவிடும்.  

நல்ல வாழ்க்கையின் தரிசனம்  
ஆசைகள் மற்றும் கனவுகள் சிறந்ததாக இருக்கலாம், ஆனால் தேவனிடமிருந்து கிடைக்கும் தரிசனம் சிறந்தது.  

1. வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதில் ஒரு நல்ல வாழ்க்கை தொடங்குகிறது. பெரும்பாலான மக்களுக்கு நாம் ஏன் பிறந்தோம்  அல்லது ஏன் தேவனால் அனுப்பப்பட்டார்கள் என்றே தெரியவில்லை. ஒரு சீஷன் தேவனை அறிகிறான், வாழ்க்கையின் நோக்கத்தைப் புரிந்துகொள்கிறான்.  

 2. ஒரு சீஷன் தனது வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை அல்லது அழைப்பைத் தேடுகிறான். பிரபஞ்சத்திற்கான ஒரு ஒட்டுமொத்த திட்டத்தையும் தேவன் வைத்திருக்கிறார், மேலும் ஒவ்வொரு நபரும் அவருடைய நோக்கத்தில் முழுமையாகப் பொருந்துகிறார்கள். இதை அறிவது மகிழ்ச்சியையும் வாழ்வதற்கான உந்துதலையும் தருகிறது.  

3. சீஷர்கள் தேவன் தம்முடைய மகிமைக்காக அவர்களைப் படைத்தார் என்பதை புரிந்துகொள்கிறார்கள் (ஏசாயா 43:7).  

4. சீஷர்கள் தேவ இராஜ்யத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் நீதியின்  அமைப்பின்படி வாழ வேண்டும் (மத்தேயு 6:33).  

5. அவர்கள் தங்கள் நித்திய வீட்டைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பார்கள்  (யோவான் 14:1-2).  

நல்ல வாழ்க்கையைப் பற்றிய ஒரு தரிசனம் எனக்கு இருக்கிறதா? 

Rev. Dr. J.N. Manokaran