சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் கொண்டாடப்படும் சில பாவங்கள் உள்ளன. மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி கிராமத்தில் தாதிச்சா வழக்கம் என அழைக்கப்படும் மனைவியை வாடகைக்கு விடும் சந்தை உள்ளது. இதனைக் குறித்ததான அறிக்கை இவ்வாறு கூறுகிறது; 'தாதிச்சா' என்பது ஒரு சமூக நடைமுறையாகும், அங்கு பெண்களை, அதாவது எப்படி பொருட்களை வாங்கவும் விற்கவும் சந்தை இருக்குமோ அதுபோல பரிமாற்றம் நடக்கிறது. விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் ஸ்டாம்ப் பேப்பர் ஒப்பந்தங்களுடன் சில மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு - பெண்களை ‘வாடகைக்கு’ பெற பல இடங்களிலிருந்தும் மக்கள் இந்த சந்தைக்கு வருகிறார்கள். விலை ஆரம்பம் ரூ 15000 மற்றும் 10 இலட்சம் வரை செல்கிறது. கன்னிப் பெண்களை அதிக விலைக்கு வாங்குகிறார்கள். (டெய்லி ஹன்ட் நியூஸ் செப்டம்பர் 13, 2024) தேவன் முதல் பெண் ஏவாளை ஆதாமின் விலா எலும்பில் இருந்து படைத்தார் (ஆதியாகமம் 2:21-23). ஆதாம் தன் மனைவியை என் சதையின் சதை என்றும் என் எலும்பின் எலும்பு என்றும் கொண்டாடுகிறான். இன்று, கலாச்சார பாவங்களும் சமூக பாவங்களும் தேவனுக்கும் வேதாகம சத்தியங்களுக்கும் எதிரானவையாக காணப்படுகிறது.
நபரா அல்லது சொத்தா?
பெரும்பாலான கலாச்சாரங்களில், பெண்கள் ஒரு மனுஷியாகவோ அல்லது தனிநபராகவோ கருதப்படுவதில்லை. சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் பெண்களை பொது இடங்களில் பார்க்கக்கூடாது, அவர்களின் குரல் தெருக்களில் கேட்கக்கூடாது, கல்வி கற்கக்கூடாது என்று சட்டம் இயற்றியுள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பெண்களை கண்ணியமாக நடத்தினார் மற்றும் சில பெண் சீஷர்களைக் கொண்டிருந்தார் (லூக்கா 8:1-3; மத்தேயு 27:55,56). மேலும் உயிர்த்தெழுந்த பிறகு முதன்முதலில் கர்த்தர் மகதலேனா மரியாளுக்குத் தோன்றினார் (யோவான் 20:14-16).
தவறான புரிதல்:
பெண்கள் செவிலியர்களாகவும், வேலைக்காரர்களாகவும், சமையற்காரர்களாகவும் வாங்கப்பட்டனர், அவர்கள் மனைவிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தேவன் பெண்களை உதவியாளர்களாகவோ அல்லது சக ஊழியர்களாகவோ அல்லது சமபங்காளர்களாக படைத்தார், வேலையாட்களாகவோ அடிமைகளாகவோ அல்ல.
விலை:
பழங்கால சந்தைகளில் ஆடு, மாடு வாங்கி விற்பது போன்று, பெண்களும் அடிமைகளாக வாங்கப்படுகிறார்கள், விற்கப்படுகிறார்கள். பறவைகள் அல்லது விலங்குகளை விட ஆண்களும் பெண்களும் மிகவும் மதிப்புமிக்கவர்கள் (மத்தேயு 10:31) என்பதை எந்த மனிதனும் மறக்க கூடாது.
உடன்படிக்கையா அல்லது ஒப்பந்தமா?
இந்த ஒப்பந்தம் முத்திரைத் தாள்களில் கையெழுத்திடப்பட்டிருப்பதால், இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என அரசுக்குத் தெரியும். ஆனாலும், அரசியல் வாதிகளோ, அதிகாரவர்க்கத்தினரோ இத்தகைய தீய செயல்களுக்கு எதிராகச் செயல்படவில்லை. துரதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இதில் ஏழைகளை உயர்த்துவதற்குப் பதிலாக, இதுபோன்ற பெண்களுக்கு எதிரான விற்பனைப் பத்திரங்களுக்கு அரசு அனுமதி அளிக்கிறது. வேதாகமம் திருமணத்தை ஒரு உடன்படிக்கையாகக் கற்பிக்கிறது, ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வாழ்நாள் முழுவதும் விசுவாசமான அர்ப்பணிப்பே (மாற்கு 10:8-9) உடன்படிக்கை ஆகும். பெண்கள் வாங்குவதற்கும், பயன்படுத்துவதற்கும், பின்னர் தூக்கி எறியப்படுவதற்குமான ஒற்றைப்பயன் பொருட்கள் அல்ல.
பெண்களைக் குறித்ததான தேவனின் நோக்கம் எனக்கு புரிகிறதா?
Rev. Dr. J.N. Manokaran