ஒரு மந்திர எண்ணா

வேதாகமத்தில் நாற்பது என்ற எண் எந்த மந்திரத்தையும் குறிக்கும் எண் அல்ல. இருப்பினும், அது பலமுறை இடம்பெற்றுள்ளதால், அந்த நாற்பதுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் ஆவிக்குரிய அர்த்தங்களையும், விளைவுகளையும் கவனமாக பரிசீலிப்பது நல்லது.

பக்குவமடைய வடிவமைக்கப்பட்டவர்கள்:
எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்த இஸ்ரவேலர், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தின் குடிமக்களாக தகுதியுடையவராக ஆக்கப்படுவதற்காக, வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் கர்த்தரால் பயிற்சியளிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் குறை கூறினர், தேவனுக்கெதிராக எழுந்தனர், மோசேயும் ஆரோனுக்கும் விரோதமாக எழுந்தனர். இருந்தபோதிலும், தேவன் பொறுமையுடன் அவர்களை வடிவமைத்தார்; ஆசரிப்புக் கூடாரத்தை வழங்கி ஆராதிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொடுத்தார், பத்துக் கட்டளைகள், சமூகச் சட்டங்கள், பரிசுத்தக் கட்டளைகள் ஆகியவற்றை உபதேசித்தார்; எதிரிகளுக்கு எதிராகப் போராட அவர்களை ஆயத்தப்படுத்தி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடிமக்களாக வாழ அவர்களை பயிற்றுவித்தார்.

தேவனிடமிருந்து பெறுதல்:
மோசே, பத்து கட்டளைகளைப் பெறுவதற்காக, உணவோ நீரோ எதையும் உட்கொள்ளாமல் நாற்பது நாட்கள் உபவாசம் இருந்து, தேவனுடைய சமூகத்தில் காத்திருந்தான். இது சீஷர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடமாக உள்ளது; ஆவிக்குரிய சத்தியங்களை அறிந்து, வாழ்வை மாற்றிக்கொள்ள தேவன் கற்பிக்கும் வரை சில நேரங்களில் நீண்ட நேரம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியது அவசியம் என்பதை இது போதிக்கிறது (யாத்திராகமம் 24:18).

கர்த்தராகிய இயேசுவின் உபவாசம்:
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து தமது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் நாற்பது நாட்களும் நாற்பது இரவுகளும் உபவாசமிருந்தார் (மத்தேயு 4:2). உபவாச முடிவில், சாத்தான் அவரைச் சோதித்து, மனிதகுலத்தின் இரட்சிப்புத் திட்டத்திலிருந்து விலக்க முயன்றான். ஆனால் கர்த்தர், இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய் தேவவார்த்தையால் சாத்தானை வென்று, வெற்றியடைந்தார்.

நாற்பது நாட்கள் பழித்துரைத்தல்:
தாவீது அவனை எதிர்கொண்டு வெற்றிபெறும் முன், கோலியாத் நாற்பது நாட்கள் இஸ்ரவேல் படையினரை கேலி செய்தான் (1 சாமுவேல் 17:16). சில நேரங்களில், தேவன் சாத்தானுக்கு தேவனுடைய கிரியைகளையும், ஜனங்களையும் கிண்டல் கேலிக்கு அவமதிக்க சில நாட்கள் அனுமதிக்கிறார். அத்தகைய காலங்களில், தேவன் தமது திட்டத்தையும் நோக்கத்தையும் நிறைவேற்ற தாவீதைப் போல கருவிகளை (மக்களை) எழுப்புகிறார்.

நாற்பது நாள் பிரசங்கம்:
யோனா நினிவே நகரத்தில் நாற்பது நாட்கள் பிரசங்கித்தான். அவன் செய்த பிரசங்கம் தெருக்களிலும் சந்தைகளிலும் பேசப்பட்டு, இறுதியில் அரசனின் செவிகளிலும் சென்றது. பின்னர் அரசனும், நகரமெங்கும் மக்கள் உபவாசம் இருந்து, தாழ்மையை வெளிப்படுத்தி, இரட்டுடுத்தி, சாம்பலில் அமர்ந்து மனந்திரும்பினர் (யோனா 3:1–10). யோனா, நகரம் கடும் நிலநடுக்கமோ, சுனாமியாலோ அழிந்துவிடுமென்று எதிர்பார்த்தபோது, மனந்திரும்பும் ஆவிக்குரிய சுனாமி அந்த நகரத்தில் வந்தது. நம்முடைய ஊழியத்திலும், தேவன் எதிர்பாராத அதிசயமான விளைவுகளை அருளுகிறார்.
 
நான் கற்றுக்கொண்ட பாடங்களை பற்றி சிந்திக்கிறேனா?

Rev. Dr. J.N. Manokaran