பெங்களூர் நகரில் 19 வயது வாலிப பெண் ஒருவள் மாணவர் ஆலோசகராக பணிபுரிந்து வந்தார். தனது காதலனுடன் சேர்ந்து, ஒரு சர்வீஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினார். மூன்று நாட்களுக்குப் பிறகு அவள் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தாள், மேலும் அவளது உடல் சிதைந்திருந்தது. காதலன் முன்கூட்டியே கொலையை திட்டமிட்டு அதைச் செய்தான். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, 26 நவம்பர் 2024) அவளது அகால மரணத்தைக் கவனிப்பது பரிதாபகரமானது. “அறிவுரைகளைக் கேள்; ஒழுக்கத்தை ஏற்றுக்கொள். அப்போது நீ அறிவாளி ஆவாய். ஜனங்களுக்கு பலவித எண்ணங்கள் தோன்றலாம். எனினும் கர்த்தருடைய திட்டங்களே நிறைவேறும்” (நீதிமொழிகள் 19:20-21). துரதிர்ஷ்டவசமாக, ஆலோசகராகிய அப்பெண் தெய்வீக ஆலோசனையைப் பின்பற்றவில்லை, அவளுடைய சுதந்திரமான வாழ்க்கை முறை அவளை மரணத்திற்கு அழைத்துச் சென்றது.
கேளுங்கள்:
ஆலோசனை வழங்குவதற்கு முன், ஒருவர் கேட்க வேண்டும். எதையும், எல்லாவற்றையும் கேட்பது மட்டுமல்லாமல், தேவ வார்த்தையாகிய கர்த்தரின் ஆலோசனையையும் கேட்க வேண்டும். ஒரு பாக்கியவான் துன்மார்க்கரின் ஆலோசனையை நிராகரித்து, இரவும் பகலும் நியாயப்பிரமாணத்தைத் தியானிக்கிறான் (சங்கீதம் 1:1-3).
ஏற்றுக்கொள்ளுங்கள்:
கேட்பது, ஒருவேளை பகுப்பாய்வு செய்து புரிந்துகொள்வது கூட போதாது. தேவனிடமிருந்து வரும் அறிவுறுத்தலை வெளிப்படுத்தப்பட்ட மற்றும் இறுதி உண்மையாக ஏற்றுக்கொள்வது அவசியம். சத்தியத்தை உள்வாங்காமல், சத்தியத்தை அறிவிப்பது அல்லது அதைப் பற்றி மக்களுக்கு ஆலோசனை வழங்குவது சாத்தியமில்லை. இந்தப் பெண் ஒருவேளை சத்தியத்தைக் கேட்கவோ ஏற்றுக்கொள்ளவோ இல்லை போலும். தனது தொழிலில் அவளுடைய செயல்திறன் வெறும் வெற்று வார்த்தைகளாகவே இருந்திருக்கலாம்.
தேவ நோக்கம்:
ஆலோசகர்கள் தேவ நோக்கத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு வழிகாட்டிகளாக உள்ளனர். மனித நோக்கங்களும் லட்சியங்களும் போதுமானவை அல்ல, சில சமயங்களில் ஆபத்தானவை. தேவ நோக்கத்தை அறியாமல், அந்த இளம் பெண் தீய நோக்கங்களைக் கொண்ட ஒரு மனிதனுடன் உறவைத் தொடர்ந்தாள்.
குருட்டுத் தலைவர்கள்:
சத்தியத்தை அறியாத குருடன் இன்னொரு குருடனை வழிநடத்தினால், இருவரும் ஒரே குழியில் விழுவார்கள் (மத்தேயு 15:14). துரதிர்ஷ்டவசமாக, அவள் மரணக் குழியில் விழுந்தாள், அது பயங்கரமானது. அப்படியானால் அவளுடைய ஆலோசனை மற்றும் வீடியோ பதிவுகளைப் பின்பற்றுபவர்களுக்கு என்ன நடக்கும்?
தெய்வீக ஆலோசகர்கள்:
அனைத்து சீஷர்களும் குடும்பம், சுற்றுப்புறம், பணியிடம், திருச்சபை, சமூகம் என எல்லா சூழலிலும் தெய்வீக ஆலோசகர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். தேவன், அவரது வார்த்தை மற்றும் சத்தியத்தைப் பற்றிய அறிவைக் கொண்டு, சீஷர்கள் உலகிற்கு ஆலோசகர்களாக இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளனர்.
நான் வேதாகமத்தைக் கற்பிக்கும் ஆலோசகரா?
Rev. Dr. J.N. Manokaran