யோபு 5:9; 9:10 ஆராய்ந்து முடியாத காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
1. அவருடைய இலக்கம் ஆராய்ந்து முடியாது யோபு 36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது. சங்கீதம் 102:24 என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளா தேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். சங்கீதம் 90:4;2பேதுரு 3:8
3. அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாது ஏசாயா 40:28(27-30) பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தரா கிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்துமுடியாதது. லூக்கா 2:47 அவர் (இயேசு) பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தி யையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்து பிரமித்தார்கள்.
5. அவருடைய சத்தத்தை தவிர்க்க முடியாது யோபு 37:4 (1-7) அதற்கு பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது.