1. விண்ணப்பத்தை அறிந்து உதவுபவர் 1சாமுவேல் 1;17,27 அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 1இராஜாக்கள் 9:3 நீ என் சமுகத்தில் செய்த விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன் (சாலொமோன்) சங்கீதம் 6:9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார் (தாவீது)
2. விசுவாசத்தை அறிந்து உதவுபவர் மத்தேயு 8:13(5-10) இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். மத்தேயு 9:29(27-31) இரண்டு குருடர்களுடைய கண்களைத் கர்த்தர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
3. விருப்பத்தை அறிந்து உதவுபவர் சங்கீதம் 20:4(1-9); சங்கீதம் 21:2 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி,உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவார் 1இராஜாக்கள் 3:5 கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். சங்கீதம் 145:19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.