ரோமர் 12:21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மை யினாலே வெல்லு. மத்தேயு 5:37,39 தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். 2தீமோத்தேயு 2:24 ஊழியக்காரன் தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கணும் 1சாமுவேல் 24:17 சவுல்-தாவீது ஆதியாகமம் 50:20 தீமையை நன்மையாய் 1. நீங்கள் தீமையை விலக்கிடுங்கள் சங்கீதம் 34:14,27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்... அதைத் தொடர்ந்துகொள் (நிலைத்திருப்பாய்) நீதிமொழிகள் 3:7 கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு நீதிமொழிகள் 4:27 உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக நீதிமொழிகள் 16:17 தீமையை விட்டு விலகுவதே செம்மையான பாதை 2. நீங்கள் தீமையை வெறுத்திடுங்கள் ரோமர் 12:9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள். சங்கீதம் 97:10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடு நீதிமொழிகள் 8:13 தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் ஆமோஸ் 5:15 நீங்கள் தீமையை வெறுத்து... நியாயத்தை நிலைப்படுத்து 3. நீங்கள் தீமையைச் செய்யாதிருங்கள் 1தெசலோனிக்கேயர் 5:15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள் நீதிமொழிகள் 17:13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டை விட்டுத் தீமை நீங்காது நீதிமொழிகள் 31:12; சங்கீதம் 34:16; ஏசாயா 14:20; 1பேதுரு 3:12 4. நீங்கள் தீமையைப் பின்பற்றாதிருங்கள் 3யோவான் 1:11 பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயி ருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை 5. நீங்கள் தீமையைத் தேடாதிருங்கள் நீதிமொழிகள் 11:27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்
Author: Rev. M. Arul Doss