தொடர்ந்து  செய்துகொண்டேயிருங்கள்

ஊழியத்தை தொடர்ந்து 
செய்துகொண்டேயிருங்கள் 
உங்களுக்கு
ஊதியத்தை கர்த்தர்
உயர்த்திக்கொண்டேயிருப்பார்...

சேவையை தொடர்ந்து 
செய்துகொண்டேயிருங்கள் 
உங்கள் 
தேவையை கர்த்தர்
சந்தித்துக்கொண்டேயிருப்பார்...

ஜெபத்தை தொடர்ந்து 
செய்துகொண்டேயிருங்கள் 
உங்களுக்கு
ஜெயத்தை கர்த்தர்
கொடுத்துக்கொண்டேயிருப்பார்...

உதவியை தொடர்ந்து 
செய்துகொண்டேயிருங்கள் 
உங்களுக்கு
பதவியை கர்த்தர்
கூட்டிக்கொண்டேயிருப்பார்...

நற்பணிகளை தொடர்ந்து 
செய்துகொண்டேயிருங்கள் 
உங்களுக்கு
நற்கனிகளை கர்த்தர்
உருவாக்கிக்கொண்டேயிருப்பார்...

வசனத்தை தொடர்ந்து 
விதைத்துக்கொண்டேயிருங்கள் 
உங்கள்
விசனத்தை கர்த்தர்
புதைத்துக்கொண்டேயிருப்பார்...

கூட்டங்களை தொடர்ந்து 
நடத்திக்கொண்டேயிருங்கள் 
உங்கள்
திட்டங்களை கர்த்தர்
புதுப்பித்துக்கொண்டேயிருப்பார்...

எதற்காகவும் எவருக்காகவும்
உங்கள் தரிசனத்தையும் 
உங்கள் கரிசனத்தையும்
மாற்றவேண்டாம் 
மறைக்கவேண்டாம்
தொடர்ந்து
செய்துகொண்டேயிருங்கள்...

குறை சொல்வதற்கு
ஆயிரம் பேர் இருக்கலாம்
ஆனால்
நிறை சொல்வதற்கு
ஆயிரமாயிரம் பேர்களை
கர்த்தர் எழுப்புவார்
சோர்ந்துபோகவேண்டாம்
தொடர்ந்து
செய்துகொண்டேயிருங்கள்... 

Author . Rev. M. Arul Doss

Rev. M. ARUL DOSS