என் ஆருயிர் நண்பனே

என் உயிருக்கு உயிரான
நண்பனே!
என் உயிரிலே கலந்த
அன்பனே!
என் உணர்விலே உறைந்த 
இன்பனே!

உன் நட்பு
என்னை வெகுவாய்
ஈர்த்தது!
உன் கற்பு
என்னை விரைவாய்
கவர்ந்தது!

உன் அன்புக்காக 
நான் ஏங்கி நின்றேன்
நீ என்னைத்
தாங்கிக்கொண்டாய்!

உன் நட்புக்காக
நான் காத்துக்கிடந்தேன்
நீ என்னைச்
சேர்த்துக்கொண்டாய்!

நான் அழாமல் இருக்க 
நீ என்னை
அணைத்துக்கொண்டாய்!
நான் விழாமல் இருக்க 
நீ என்னை
இணைத்துக்கொண்டாய்!

நான் சோர்ந்துபோனபோது
உன்னையே
சார்ந்துகொண்டேன்  
உன்னோடே
சேர்ந்துகொண்டேன்  

இனிமேல்
உன் அருகிலே 
நான் இருக்க போகிறேன்
உன் மடியிலே
நான் உறங்க போகிறேன்

உன் மார்பிலே
நான் சாய போகிறேன்
உன் மறைவிலே
நான் வாழ போகிறேன்

என்னை ஏற்றுக்கொள்ளும் 
நண்பனே
என்னை ஏந்திக்கொள்ளும் 
அன்பனே

என்னைப் பார்த்துக்கொள்ளும் 
நண்பனே
என்னைப் போர்த்துக்கொள்ளும்
அன்பனே

உனக்காக நானிருப்பேன்
உயிர் உள்ளவரை...
உனக்காக காத்திருப்பேன்
உன் வருகை வரை...

Author . Rev. M. Arul Doss

Rev. M. ARUL DOSS