தாலாட்டு

ஆரிரரோ ... எங்கள் அன்பே
நீ கண்வளராய்
ஆண்டவர் அருளாலே
அற்புதமாய் வந்த பொற்பாலா
கண்வளராய்... ஆ..ஆ..ஆரிரோ

பார்த்திபன் தாவீதைப் போல்
நீ பரமர்க்குப் பிரியமாவாய்
கீர்த்தியில் சாமுவேலாய்
செல்வமே நீயும் சிறந்திட வேணுமடா... ஆ..ஆ..ஆரிரோ

கிதியோன் வீரனைப் போல்
சாத்தானின் சதிதனில்
கதியென வீழ்ந்திட்ட
மாந்தர்களை மீட்டிட வேணுமடா...ஆ..ஆ..ஆரிரோ

நற்செய்தி உரைப்பதிலே
தூதன் ஆவாய் கண்ணே
நாடெல்லாம் போற்றவே
நாதர் இயேசுவின் நற்சீடர் ஆவாய் கண்ணே ...ஆ..ஆ..ஆரிரோ

இறைவனை தேடுவதில்
இணையற்ற தானியேல் ஆவாய்
ஈடில்லா ஞானத்தில் சாலொமோன் ராஜாவாய்
ஜகத்தினில் விளங்கிடுவாய்...ஆ..ஆ..ஆரிரோ..

இன்னல் செய்தவர்க்கும் 
இன்னருள் புரிவதிலே 
இனிய யோசேப்பாய்
என்றென்றும் வாழ்வாய் எங்கள் செல்வமே...ஆ..ஆ..ஆரிரோ..

Author: Sis. Vanaja Paulraj

Sis. Vanaja Paulraj