எண்ணம் போல் வாழ்க்கை

எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லுறாங்க!

என் எண்ணமெல்லாம் நீர் வேண்டும்!

உம்மோடு நடக்கும் அனுபவம் வேண்டும்!

உம்மோடு பேசி சஞ்சரிக்க வேண்டும்!

 

உந்தன் திருவசனம் எந்தன் உணவாகட்டும்!

உந்தன் திருபிரசன்னம் என்னுள் நிறைவாகட்டும்!

உம்மோடு நான் பேச வேண்டும்!

என்னோடு நீர் பேச நான் மகிழ வேண்டும்!

 

எந்தன் இருகண்கள் என்றும் உண்மை காணட்டும்!

எந்தன் இருசெவிகள் உந்தன் குரல் கேட்கட்டும்!

என் இதயம் உமதாக வேண்டும்!

என்றும் நீர் தங்கும் கோயில் ஆக வேண்டும்!

Bro. A Dinakaran