எஸ்தர் பேசுகிறேன்

அத்சாள் எனும் பெயர் கொண்ட நான் பெற்றோர்களை இழந்த நட்சத்திரம்

மொர்தெகாயின் மடியில் வளர்ந்தன நட்சத்திரம்

அகாஸ்வேரு ராஜாவின் காதல் நட்சத்திரம்

இறை மக்களை அழிக்க நினைத்த ஆமானுக்கு எரிநட்சத்திரம்

இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் உள்ள 127 நாடுகளுக்கும் 
அன்றிலிருந்து இன்றளவும் நான் நம்பிக்கையின் நட்சத்திரம் 

ஆபிரகாமின் நட்சத்திரங்களே!
சரித்திர நாயகன்
இயேசுகிறிஸ்து உங்களோடு இருப்பாரானால்
வாழ்வில்
எல்லாம் சாத்தியம்
அவரே சத்தியம்

அவர் எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி

அவரிடத்தில் வாருங்கள்
இருளில் குடியிருந்தது போதும்

வெளிச்சத்திற்கு வா
அவரின் பிரியமே
உன் விலாசமே வெளிச்சம் தான்
இன்னும் ஏன் இருளில் 
குடியிருக்கிறாய்

வெளிச்சத்திடம் வா எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது 

கவிமுகில் சுரேஷ் தர்மபுரி

Bro.Kavimugizh Suresh