மனம் கசந்து போகவேண்டாம்
நம்முடைய
அவசியமும், அவசரமும்
மற்றவர்
புரியாமல் இருக்கலாம்
நம்முடைய
சேவையும், தேவையும்
மற்றவர்
தெரியாமல் இருக்கலாம்
நம்முடைய
அழைப்பையும், உழைப்பையும்
மற்றவர்
அறியாமல் இருக்கலாம்
நம்முடைய
எதிர்ப்பையும், எதிர்பார்ப்பையும்
மற்றவர்
விரும்பாமல் இருக்கலாம்
நம்முடைய
உணர்வையும், உணர்ச்சியையும்
மற்றவர்
மதிக்காமல் இருக்கலாம்
நம்முடைய
அழுகையும், தொழுகையும்
மற்றவர்
பார்க்காமல் இருக்கலாம்
நம்முடைய
உள்ளத்தையும், இல்லத்தையும்
மற்றவர்
கவனிக்காமல் இருக்கலாம்
நம்முடைய
கலையையும், நிலையையும்
மற்றவர்
கணிக்காமல் இருக்கலாம்
நம்முடைய
வறுமையும், வெறுமையும்
மற்றவர்
காணாமல் இருக்கலாம்
நம்முடைய
அருமையும், பெருமையும்
மற்றவர்
நினைக்காமல் இருக்கலாம்
அதற்காக
மனம் கசந்து போகவேண்டாம்
நம் நினைவிலே
உறைந்திருக்கும் கர்த்தர்
இறுதிவரை
நம்மைக் கைவிடமாட்டார்
உறுதியாக இருப்போம்
அவர் நமக்கு
உறுதுணையாக இருப்பார்
Author . Rev. M. Arul Doss
Rev. M. ARUL DOSS