வெங்கதிரோனும் வெண்ணிலவும்

வெண்ணிலவுக்கு சுயஒளி சிறிதேனுமில்லை,
வெங்கதிரோன் ஒளியினை பிரதிபளித்து,
தரணிக்குத் தண்நிலவாய் காட்சி தரும்.(ஏதேனில்)
தரமிழந்த மானுடர்க்கும் அருளொளி இல்லை
தன்னிகரில் இல்லா இயேசுகிறிஸ்துவின் இன்னருளை
தன்னகத்தே கொண்டு நீ பிரதிபளித்தால்
அன்பின் பெட்டகமாய் அவனியில் வாழ்ந்து
ஆண்டவரை அனைவரும் அறியச் செய்திடலாம்.

Author: Sis. Vanaja Paulraj

Sis. Vanaja Paulraj