psalm 122

1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

3 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.

5 அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

7 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

8 என் சகோதரர்நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும் உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.

9 எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

1 I was glad when they said unto me, Let us go into the house of the LORD.

2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று.

2 Our feet shall stand within thy gates, O Jerusalem.

3 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது.

3 Jerusalem is builded as a city that is compact together:

4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும்.

4 Whither the tribes go up, the tribes of the LORD, unto the testimony of Israel, to give thanks unto the name of the LORD.

5 அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது.

5 For there are set thrones of judgment, the thrones of the house of David.

6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக.

6 Pray for the peace of Jerusalem: they shall prosper that love thee.

7 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக.

7 Peace be within thy walls, and prosperity within thy palaces.

8 என் சகோதரர்நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும் உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன்.

8 For my brethren and companions' sakes, I will now say, Peace be within thee.

9 எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

9 Because of the house of the LORD our God I will seek thy good.