சங்கீதம் 27:1-10

27:1 கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன். கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர். யாருக்கு அஞ்சுவேன்?
27:2 என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள்.
27:3 எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்.
27:4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.
27:5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.
27:6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
27:7 கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி எனக்கு உத்தரவு அருளிச்செய்யும்.
27:8 என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று.
27:9 உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும்.
27:10 என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.




Related Topics


கர்த்தர் , என் , வெளிச்சமும் , என் , இரட்சிப்புமானவர் , யாருக்குப் , பயப்படுவேன் , கர்த்தர் , என் , ஜீவனின் , பெலனானவர் , யாருக்கு , அஞ்சுவேன்? , சங்கீதம் 27:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 27 TAMIL BIBLE , சங்கீதம் 27 IN TAMIL , சங்கீதம் 27 1 IN TAMIL , சங்கீதம் 27 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 27 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 27 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 27 TAMIL BIBLE , PSALM 27 IN TAMIL , PSALM 27 1 IN TAMIL , PSALM 27 1 IN TAMIL BIBLE . PSALM 27 IN ENGLISH ,