சங்கீதம் 20:1-9

20:1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
20:2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
20:3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)
20:4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
20:5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
20:6 கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.
20:7 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம்.
20:8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
20:9 கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.




Related Topics


ஆபத்துநாளிலே , கர்த்தர் , உமது , ஜெபத்தைக் , கேட்பாராக; , யாக்கோபின் , தேவனுடைய , நாமம் , உமக்கு , உயர்ந்த , அடைக்கலமாவதாக , சங்கீதம் 20:1 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 20 TAMIL BIBLE , சங்கீதம் 20 IN TAMIL , சங்கீதம் 20 1 IN TAMIL , சங்கீதம் 20 1 IN TAMIL BIBLE , சங்கீதம் 20 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 20 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 20 TAMIL BIBLE , PSALM 20 IN TAMIL , PSALM 20 1 IN TAMIL , PSALM 20 1 IN TAMIL BIBLE . PSALM 20 IN ENGLISH ,