நீதிமொழிகள் 4:1-10

4:1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள்.
4:2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள்.
4:3 நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4:4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
4:5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
4:6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
4:7 ஞானமே முக்கியம் ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
4:8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
4:9 அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
4:10 என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.




Related Topics


பிள்ளைகளே , நீங்கள் , தகப்பன் , போதகத்தைக் , கேட்டு , புத்தியை , அடையும்படி , கவனியுங்கள் , நீதிமொழிகள் 4:1 , நீதிமொழிகள் , நீதிமொழிகள் IN TAMIL BIBLE , நீதிமொழிகள் IN TAMIL , நீதிமொழிகள் 4 TAMIL BIBLE , நீதிமொழிகள் 4 IN TAMIL , நீதிமொழிகள் 4 1 IN TAMIL , நீதிமொழிகள் 4 1 IN TAMIL BIBLE , நீதிமொழிகள் 4 IN ENGLISH , TAMIL BIBLE PROVERBS 4 , TAMIL BIBLE PROVERBS , PROVERBS IN TAMIL BIBLE , PROVERBS IN TAMIL , PROVERBS 4 TAMIL BIBLE , PROVERBS 4 IN TAMIL , PROVERBS 4 1 IN TAMIL , PROVERBS 4 1 IN TAMIL BIBLE . PROVERBS 4 IN ENGLISH ,