லூக்கா 18:18-27

18:18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
18:19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
18:20 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
18:21 அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
18:22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
18:23 அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
18:24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
18:25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
18:26 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
18:27 அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.




Related Topics


அப்பொழுது , தலைவன் , ஒருவன் , அவரை , நோக்கி: , நல்ல , போதகரே , நித்திய , ஜீவனைச் , சுதந்தரித்துக்கொள்வதற்கு , நான் , என்ன , செய்யவேண்டும் , என்று , கேட்டான் , லூக்கா 18:18 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 18 TAMIL BIBLE , லூக்கா 18 IN TAMIL , லூக்கா 18 18 IN TAMIL , லூக்கா 18 18 IN TAMIL BIBLE , லூக்கா 18 IN ENGLISH , TAMIL BIBLE Luke 18 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 18 TAMIL BIBLE , Luke 18 IN TAMIL , Luke 18 18 IN TAMIL , Luke 18 18 IN TAMIL BIBLE . Luke 18 IN ENGLISH ,