யோவான் 6:51-58

6:51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
6:52 அப்பொழுது யூதர்கள்; இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள்.
6:53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
6:54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்.
6:55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது.
6:56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்.
6:57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.
6:58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்தமன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.




Related Topics


நானே , வானத்திலிருந்திறங்கின , ஜீவ , அப்பம்; , இந்த , அப்பத்தைப் , புசிக்கிறவன் , என்றென்றைக்கும் , பிழைப்பான்; , நான் , கொடுக்கும் , அப்பம் , உலகத்தின் , ஜீவனுக்காக , நான் , கொடுக்கும் , என் , மாம்சமே , என்றார் , யோவான் 6:51 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 6 TAMIL BIBLE , யோவான் 6 IN TAMIL , யோவான் 6 51 IN TAMIL , யோவான் 6 51 IN TAMIL BIBLE , யோவான் 6 IN ENGLISH , TAMIL BIBLE John 6 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 6 TAMIL BIBLE , John 6 IN TAMIL , John 6 51 IN TAMIL , John 6 51 IN TAMIL BIBLE . John 6 IN ENGLISH ,