யோபு 7:1-10

7:1 பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?
7:2 ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,
7:3 மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
7:4 நான் படுத்துக் கொள்கிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்குவெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது.
7:5 என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
7:6 என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும்.
7:7 என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும்.
7:8 இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன்.
7:9 மேகம் பறந்துபோகிறதுபோல பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான்.
7:10 இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.




Related Topics


பூமியிலே , போராட , மனுஷனுக்குக் , குறிக்கப்பட்ட , காலம் , உண்டல்லவோ? , அவன் , நாட்கள் , ஒரு , கூலிக்காரன் , நாட்களைப்போல் , இருக்கிறதல்லவோ? , யோபு 7:1 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 7 TAMIL BIBLE , யோபு 7 IN TAMIL , யோபு 7 1 IN TAMIL , யோபு 7 1 IN TAMIL BIBLE , யோபு 7 IN ENGLISH , TAMIL BIBLE JOB 7 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 7 TAMIL BIBLE , JOB 7 IN TAMIL , JOB 7 1 IN TAMIL , JOB 7 1 IN TAMIL BIBLE . JOB 7 IN ENGLISH ,