ஆதியாகமம் 26:24-32

26:24 அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
26:25 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள்.
26:26 அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள்.
26:27 அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான்.
26:28 அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்: ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம்.
26:29 நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள்.
26:30 அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள்.
26:31 அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள்.
26:32 அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள்.




Related Topics


அன்று , ராத்திரியிலே , கர்த்தர் , அவனுக்குத் , தரிசனமாகி: , நான் , உன் , தகப்பனாகிய , ஆபிரகாமுடைய , தேவன் , பயப்படாதே , நான் , உன்னோடேகூட , இருந்து , என் , ஊழியக்காரனாகிய , ஆபிரகாமினிமித்தம் , உன்னை , ஆசீர்வதித்து , உன் , சந்ததியைப் , பெருகப்பண்ணுவேன் , என்றார் , ஆதியாகமம் 26:24 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 26 TAMIL BIBLE , ஆதியாகமம் 26 IN TAMIL , ஆதியாகமம் 26 24 IN TAMIL , ஆதியாகமம் 26 24 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 26 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 26 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 26 TAMIL BIBLE , Genesis 26 IN TAMIL , Genesis 26 24 IN TAMIL , Genesis 26 24 IN TAMIL BIBLE . Genesis 26 IN ENGLISH ,