உபாகமம் 16:11-17

16:11 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன்வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு,
16:12 நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய்.
16:13 நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து,
16:14 உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும் உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்;
16:15 உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்து கொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக.
16:16 வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்.
16:17 ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன்.




Related Topics


உன் , தேவனாகிய , கர்த்தர் , தமது , நாமம் , விளங்கும்படி , தெரிந்துகொள்ளும் , ஸ்தானத்திலே , நீயும் , உன் , குமாரனும் , உன் , குமாரத்தியும் , உன் , வேலைக்காரனும் , உன்வேலைக்காரியும் , உன் , வாசல்களில் , இருக்கிற , லேவியனும் , உன்னிடத்தில் , இருக்கிற , பரதேசியும் , திக்கற்ற , பிள்ளையும் , விதவையும் , உன் , தேவனாகிய , கர்த்தருடைய , சந்நிதியில் , சந்தோஷப்பட்டு , , உபாகமம் 16:11 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 16 TAMIL BIBLE , உபாகமம் 16 IN TAMIL , உபாகமம் 16 11 IN TAMIL , உபாகமம் 16 11 IN TAMIL BIBLE , உபாகமம் 16 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 16 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 16 TAMIL BIBLE , DEUTERONOMY 16 IN TAMIL , DEUTERONOMY 16 11 IN TAMIL , DEUTERONOMY 16 11 IN TAMIL BIBLE . DEUTERONOMY 16 IN ENGLISH ,