1இராஜாக்கள் 17:9-16

17:9 நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.
17:10 அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்த போது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
17:11 கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான்.
17:12 அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.
17:13 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம்.
17:14 கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
17:15 அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள்.
17:16 கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை.




Related Topics


நீ , எழுந்து , சீதோனுக்கடுத்த , சாறிபாத் , ஊருக்குப் , போய் , அங்கே , தங்கியிரு; , உன்னைப் , பராமரிக்கும்படி , அங்கே , இருக்கிற , ஒரு , விதவைக்குக் , கட்டளையிட்டேன் , என்றார் , 1இராஜாக்கள் 17:9 , 1இராஜாக்கள் , 1இராஜாக்கள் IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் IN TAMIL , 1இராஜாக்கள் 17 TAMIL BIBLE , 1இராஜாக்கள் 17 IN TAMIL , 1இராஜாக்கள் 17 9 IN TAMIL , 1இராஜாக்கள் 17 9 IN TAMIL BIBLE , 1இராஜாக்கள் 17 IN ENGLISH , TAMIL BIBLE 1KINGS 17 , TAMIL BIBLE 1KINGS , 1KINGS IN TAMIL BIBLE , 1KINGS IN TAMIL , 1KINGS 17 TAMIL BIBLE , 1KINGS 17 IN TAMIL , 1KINGS 17 9 IN TAMIL , 1KINGS 17 9 IN TAMIL BIBLE . 1KINGS 17 IN ENGLISH ,