இழந்த வாய்ப்புகள்

ஒரு நல்ல விசுவாசி, தனது அலுவலகத்திற்கு ஒரு சாலையில் தினமும் பயணிப்பார்.  வழியில் ஒரு சபை இருந்தது, அங்கே ஒரு தர்மம் எடுத்து பிழைப்பவர் நின்று காசு கேட்பது வழக்கம்.  ஒரு நாள், பரிசுத்த ஆவியானவர் அவரிடம் நீ நின்று இந்த பிச்சை எடுப்பவரிடம் நற்செய்தியைப் பகிர்ந்துக் கொள் என தூண்டினார். ஆனால் அந்த விசுவாசியோ அங்கு நிறுத்தி ஒரு பிச்சை எடுப்பவரிடம் பேசுவது தனது கெளரவக் குறைச்சல் என நினைத்தபடி அந்த இடத்தைக் கடந்து சென்றார்.‌ இப்படியே மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது.  நான்காம் நாள், அவர் அந்த வழியாக சென்றபோது, ​​கூட்டமும் சலசலப்புமாக காணப்பட்டது. அவ்விசுவாசி   கூட்டத்தினூடாக எட்டிப்பார்த்தால், அந்த தர்மம் எடுத்து பிழைப்பவர் இறந்து கிடந்ததையும், நகராட்சி மக்கள் அவரது உடலை அகற்றுவதையும் கண்டார்.  விசுவாசிக்கோ அதிர்ச்சியும், அவமானமும் ஏற்பட்டவராய்‌ மற்றும் உள்ளம் அடைந்தவராய், ஐயோ இப்படி ஒரு வாய்ப்பை தவற விட்டேனே என குற்ற உணர்வுடன் கலங்கி நின்றார்.

தவறவிட்ட வாய்ப்புகள்: 
வாய்ப்புகள் குறுகிய காலத்திற்கு இருக்கும்.  அது திடீரென்று வரும்; திடீரென்று மறைந்துவிடும்.   சில நேரங்களில் தவறவிட்ட வாய்ப்புகள் என்றென்றும் இழந்ததாகவே ஆகின்றது.   இழந்தவற்றை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.   தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு நீதியின் கருவிகளாக இருக்க பல வாய்ப்புகளை வழங்குகிறார் (ரோமர் 6:13). இருப்பினும், விசுவாசிகள் வாழ்க்கையில், சில அமைப்புகளில் மற்றும் சபை சரித்திரத்தில் இழந்த வாய்ப்புகள் என்பதோ ஏராளம் ஏராளம்.

சுவிசேஷ வாய்ப்பு: 
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடன் வந்து கெத்செமனே தோட்டத்தில் பரிந்து பேச பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோரைத் தேர்ந்தெடுத்தார்.   இருப்பினும், கர்த்தர் ஜெபத்தில் தரித்திருந்த போது அவர்கள் தூங்கினார்கள் (மாற்கு 14:32-52). கர்த்தரிடம் பரிந்து பேசி ஜெபிக்க நாம் தூக்கத்தை வெல்ல முடியவில்லையே என்று அவர்கள் வாழ்நாள் முழுவதும் வருந்தியிருக்க வேண்டும்.   ஆனால், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மீண்டும் வரவில்லை. 

சுவிசேஷம் செய்வதற்கான வாய்ப்பு: 
பரிசுத்த ஆவியானவரால் தூண்டப்பட்ட விசுவாசி, பிச்சை எடுப்பவரிடம் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பை இழந்தார், அவர் இறந்துவிட்டார்.   இனி அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. 

வெற்றி பெறும் வாய்ப்பு:  
இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் எலிசாவைச் சந்திக்க வந்தான்.   முதலில், எலிசா யோவாசிடம் ஒரு அம்பு எய்யச் சொன்னார், அது விடுதலைக்கான அம்பு அதாவது கர்த்தருடைய இரட்சிப்பிற்கான அம்பு.   பின்னர் அவர் யோவாசிடம் அம்புகளை தரையில் அடிக்கச் சொன்னார்.   யோவாஸ் மூன்று முறை அடித்த பிறகு நிறுத்தினான்.   எலிசா அவனைக் கடிந்துகொண்டார், அவன் முழுமையான வெற்றியைப் பெற ஐந்து அல்லது ஆறு முறை அடித்திருக்க வேண்டும்.   இப்போது பதான் அராமை மூன்று முறையிலேயே தோற்கடிப்பான் (2 இராஜாக்கள் 13:18-19).

தேவன் அளிக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நான் பயன்படுத்துகிறேனா? 

Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more