மகிழ்ச்சியான ஆளுமை

ராஜாவான சவுலுக்கு ஊழியம் செய்ய ஒரு ஆராதனை வீரர், பாடகர் மற்றும் இசைக்கலைஞரை நியமிப்பது பற்றி ஒரு விவாதம் இருந்தது.  வாலிபனான தாவீது பற்றி ஒருவன் இப்படியாக சாட்சியம் அளித்தான். “ஒரு வேலையாள், ஈசாய் என்று ஒருவன் பெத்லேகேமில் இருக்கிறான். அவனது குமாரனுக்கு நன்றாக சுரமண்டலம் வாசிக்கத் தெரியும், தைரியமாக நன்றாக சண்டை இடுவான். அழகானவனும் சுறுசுறுப்பானவனும் கூட, மேலும் கர்த்தர் அவனுடன் இருக்கிறார் என்றான் (1 சாமுவேல் 16:18).

திறமை:  
தேவன் எல்லா மனிதர்களுக்கும் திறமைகளையும், எல்லா விசுவாசிகளுக்கும் ஆவிக்குரிய வரங்களையும் தருகிறார்.   இருப்பினும், பயிற்சி, சிரத்தை மற்றும் நிலையான உழைப்பின் மூலம் திறன்கள் பெறப்படுகின்றன. ஆற்றல் மற்றும் அணுகுமுறை ஒரு நபரை திறமையானவராக ஆக்குகிறது.   சிலர் வல்லுநர்களாகவும், சாம்பியன்களாகவும் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது, ஆனால் சோம்பேறித்தனம் அவர்களை ஒரு சாதாரணமாக செயல்படுபவராகவும் அல்லது தோல்வியடையவும் செய்கிறது.

வீரர்:  
தாவீது வீரம் மிக்கவன். எப்படியென்றால்  அவன் தனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள வனாந்தரத்தில் ஆடுகளை மேய்ப்பதற்காக வெளியில் தங்கினான்; கூச்ச சுபாவமுள்ள மக்கள் பல இரவுகள் உட்பட நீண்ட நேரம் வெளியில் வாழ முடியாதே. மேலும் பிசாசின் தொல்லை இருக்கும் போது சவுல் மிக வித்தியாசமாக நடந்து கொள்வதுண்டு, அப்போது அதை சமாளிக்கும் தைரியம் கொண்டவனாக தாவீது காணப்பட்டான். 

போர் நாயகன்:  
துணிச்சல் மட்டும் போதாது.   சுறுசுறுப்பும், தாக்கப்பட்டால் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் திறமையும் அவனுக்கு இருக்க வேண்டும்.   மந்தையைத் தாக்கும் காட்டு விலங்குகளை சமாளிக்க தாவீது தயாராக இருந்தான்.  இன்று, கிறிஸ்தவர்கள் தீமையை எதிர்க்க வேண்டும்.   

பேச்சில் விவேகம்:  
தாவீது தனது பேச்சில் மிக கவனமாக இருந்தான்.   எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும்.   ஒவ்வொரு சூழலிலும் அவனால் பொருத்தமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.   தாவீது புத்திசாலித்தனமாக பேசவும், மூர்க்கமாக ஆகக்கூடிய சவுலை அமைதிப்படுத்தவும் முடியும்.  

நல்ல பிரசன்னம்:  
தேவ பிரசன்னம் தாவீதுடன் இருப்பதாக அந்த இளைஞன் சாட்சி கூறினான். ஆம், தாவீதின் முகத்தில் அன்பும் நம்பிக்கையும் கலந்த புன்னகை இருந்ததா?  தாவீது ஒரு இனிமையான ஆளுமை கொண்டவன், அவனை அனைவரும் விரும்பினர்.  

கர்த்தராகிய ஆண்டவர் அவனோடு இருக்கிறார்:  
தாவீது ஆவிக்குரிய ரீதியில் பக்குவமுள்ளவன் மற்றும் ஆவியால் வழிநடத்தப்பட்டான்.  எனவே, தேவன் அவனுடன் இருப்பதை மற்றவர்கள் ஒப்புக்கொள்ள முடியும். தேவன் யாக்கோபுடன் இருப்பதை லாபான் அறிந்துகொள்ள முடிந்தது (ஆதியாகமம் 30:27). கர்த்தர் யோசேப்புடன் இருப்பதை பார்வோன் உணர்ந்தான் (ஆதியாகமம் 41:38). உண்மையான தேவனின் ஆவி தானியேலில் இருப்பதை நேபுகாத்நேச்சார் உணர்ந்தான் (தானியேல் 4:18).

மற்றவர்களால் நான் எப்படி விவரிக்கப்படுகிறேன்?

 Author: Rev. Dr. J .N. மனோகரன்

Rev. Dr. J.N. Manokaran


Read more