கலகத்தின் ஆழத்தில் இறங்குதல்!

 

கீழ்ப்படியாமை, கலகம் மற்றும் இதயத்தை கடினப்படுத்துதல் ஆகியவை செயல்முறைகள்.  சுவாரஸ்யம் என்னவெனில், யோனா தீர்க்கதரிசி தேவ அழைப்பு மற்றும் கட்டளையிலிருந்து தப்பி ஓட முயன்றபோது தரைத்தளம் நோக்கிய பயணத்தைத் தேர்ந்தெடுத்தார்.  யோனா நீதியுள்ளவர் மற்றும் தேவனுடன் சரியான உறவைக் கொண்டிருந்தார், எனவே, அவர் நினிவேக்கு அதாவது பலவித கலாச்சாரங்களை கைக்கொள்ளும் இடத்திற்கு மிஷனரியாக செல்ல நியமிக்கப்பட்டார் (யோனா 1:2). சில யூத மரபுகள், யோனா எருசலேமின் அழிவை முன்னறிவித்ததாகக் கூறுகின்றன. எருசலேம் நகரம் உடனே மனந்திரும்பியதால் அது அழியாமல் காக்கப்பட்டது. அதனால் நினிவேக்கும் அப்படித்தான் நடக்கும் என்று யோனா நினைத்தார்.

 சிந்தனையும் விருப்பமும்:
யோனாவின் உடனடி மறுமொழி என்பது முழுமையான கீழ்ப்படிதல் அல்ல.  அவர் மனதிற்குள் தனக்கு தானே விவாதித்து, தேவன் அழைத்த சரியான இலக்குக்கு செல்லாமல் இருக்க முடிவு செய்தார்.  அவர் தனது எண்ணங்களிலும் விருப்பத்திலும் (முடிவு) யோப்பாவுக்கு சென்றார் (யோனா 1:3). துறைமுகத்தில் கப்பல் தர்ஷீசுக்குப் போவதைக் கண்டார்.  அது தேவன் கொடுத்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தது.

சரீர செயல்பாடு:
தர்ஷீசுக்குப் போகும் கப்பலைக் கண்டு யோனா கப்பலில் ஏறினார் (யோனா 1:3). அவ்வாறு செய்வதன் மூலம், நினிவேக்குச் செல்வதற்கான எல்லா வாய்ப்பையும் அவர் மூடிவிட்டார்.

 தூக்கம் மற்றும் கப்பலின் ஆழம்:
யோனா கப்பலின் கீழ் தளத்தை விரும்பினார் (யோனா 1:5). ஆழ்ந்த தூக்கத்தின் மூலம் நினிவேக்குச் செல்வது பற்றிய எந்த எண்ணத்தையும் யோனாவால் தள்ளிப்போட முடிந்தது.  இனி தன்னை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று நினைத்தார். ஒருவேளை, அவர் விழித்தெழுந்தால், அது தர்ஷிஷுக்கு அருகில் இருப்பார் அல்லது பாதுகாப்பான புகலிடத்தை அடைவார் என்று அவர் கணித்திருக்கலாம்.

 கடலின் ஆழம்:
 புயல் கப்பலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  கப்பலின் கேப்டன் யோனா ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு எரிச்சலடைந்தான்.  யோனாவை விழித்தெழச் செய்து, விசாரித்த போது யோனா தேவ சமூகத்தில் இருந்து தப்பி ஓடுவதை அறிந்தனர்.  பின்பதாக யோனாவே தன்னை கடலில் தள்ள தீர்வு கொடுத்தார். மேலும் அதற்கு தயாராக யோனா கடலின் அடிப்பகுதிக்குச் சென்றார் (யோனா 2:7).

 தேவ அன்பின் ஆழம்:
யோனா எடுத்த முடிவை செயலாற்ற தேவன் விட்டிருக்கலாம், ஆம், யோனா தேர்ந்தெடுத்த பாதை கடலில் மூழ்கிட நினைத்த பாதை.  இருப்பினும், யோனாவை விழுங்கிய மீன் மூலம் தேவ கிருபை வெளிப்பட்டது.  மீனின் வயிறு யோனாவின் இரகசிய ஜெப அறையாக மாறியது, அங்கு அவர் தேவ சித்தத்தைச் செய்ய மீண்டும் அர்ப்பணிக்க முடியும்.

 

 அவருடைய சித்தத்தைச் செய்வதிலிருந்து நான் தப்பி ஓடுகிறேனா?
 

 

Author: Rev. Dr. J .N. மனோகரன்

 

Rev. Dr. J.N. Manokaran


Read more